
பண்ருட்டி. ஜீன்.26. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது.

.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் வரப்பிரசாத மேரி, ஹேமலதா, மாலதி ஆசிரியர்கள் ராஜராஜன், நந்த கோபால் , குமார், கோவிந்தராஜ், ராஜேந்திரன், துரைமுருகன், ரத்த பிரகாஷ், முத்துகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளர்ச்சி குழு தலைவரும் பண்ருட்டி நகர மன்ற தலைவருமான ராஜேந்திரன் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார். பண்ருட்டி காவல் ஆய்வாளர் கண்ணன் உதவி ஆய்வாளர் புஷ்பராஜ்
பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர் தசண்முகவள்ளி பழனி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் லோகநாதன் ஆகியோர் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறி அறிவுரை வழங்கினார். பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜாஆ போதை பொருள் எதிர்ப்பு நாள் உறுதி மொழியை வாசிக்க ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர் திரு.முகமது அனிபா பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர் பழனி , பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், 1600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் .

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line