
பண்ருட்டி. ஜுன்.28 கடலூர் மாவட்டம்
பண்ருட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பனை தென்னை கள் போதை பொருள் அல்ல. கள்ளை பற்றி தவறான புரிதல் தமிழகத்தில் நிலவி வருகிறது. டாஸ்மாக் அனுமதி கொடுத்து அரசு ஏன் கள் இறக்க அனுமதி கொடுக்க மறுக்கிறது. கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மாக் மரணத்தை தடுத்திட உடனடியாக கள் பாலை இறக்க அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, கடலூர் மாவட்ட செயலாளர் அருள்செல்வன் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு செயலாளர் கங்காதரன், கடலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கீதா முத்துக்குமரன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், தெற்கு மாவட்ட செயலாளர் குஞ்சதபாதம், திருவதிகை அவைத்தலைவர் மணிவண்ணன், மாளிகை மேடு ரமேஷ், பூண்டி செங்குட்டுவன், கள்ளிப்பட்டி மகாலிங்கம், பாண்டியன் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்
முருங்கானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்


More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line