பண்ருட்டி. ஜூலை.13. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் நடராஜன் தலைமை தாங்கினார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்டராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்,
வழக்கினை சி.பி. ஜ-க்கு மாற்றிட வேண்டும்,
பட்டிலியன தலைவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்,
கைக்கூலி குற்றவாளிகளை கண்டறிந்து குண்டர் சட்டத்தில் கைது செய்திட வேண்டும், தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்கிட கோரியும் புரட்சி பாரத கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர்
பால வீர வேல் கடலூர் மத்திய மாவட்டசெயலாளர்.வழக்கறிஞர்.சந்துரு புவனகிரி மாவட்ட பொருப்பாளர்.ராஜகீர்த்தி கண்டன உரையாற்றினார். நகர பொதுநல அமைப்பு செயலாளர்
தெய்வீகாதாஸ்,
பகுஜன் சமாஜ்கட்சி நிர்வாகிகள் ஜெயபிரகாஷ்,
அலேஸ். ஸிகாந். அம்பேத்கார் பொதுநல இயக்கம் தணிகாசலம், பண்ருட்டிநகரசெயலாளர்கள்
கவியரசன், விக்கிதுரை, மாவட்ட துணை செயலாளர் கந்தன் மாவட்ட இணை செயலாளர், சதீஷ்குமார், பிரபாகரன். அருள் செல்வநாதன், வெற்றிவேல், பாரதி பண்ருட்டி ஒன்றிய செயலாளர் ராஜசேகர், நெல்லிக்குப்பம் நகரசெயலாளர் கமலக்கண்ணன், தினேஷ், ரவீந்திரன், காந்தசீலன், பெருமாள், சிவமூர்த்தி மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.