பண்ருட்டி. ஜுலை. 13. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் அகழாய்வில் சமீபத்தில் இராசராசன் காலச் செம்புக் காசும், சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகளும் கண்டெடுக்கப்பட்டன. தற்போது பச்சை நிறத்திலான கண்ணாடி மணி ஒன்று கிடைத்துள்ளது. உருளை வடிவிலான இக்கண்ணாடி மணி 12.5 மி.மீ நீளமும் 8 மி. மீ விட்டமும் 0.45 கிராம் எடையும் கொண்டது. தற்போது அகழாய்வுச் செய்யப்படும் இடம் மக்களின் வாழ்விடப்பகுதியாக இருந்துள்ளதை மேலும் உறுதி செய்கின்றது.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.