கந்தர்வகோட்டை ஜூன் 10.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளில் ஆதார் எடுக்கும் பணியை கந்தர்வக்கோட்டை பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அமிர்தம் மாலதி தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் அனைவரும் வரவேற்றார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவி அகிலா சீனிவாசன் முன்னிலை வகித்தார் .
பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு புதுமையான செயல்பாடுகளை, திட்டங்களை வகுத்து, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டையை பெறுவது அவசியமாகும்.
பள்ளிகளில் ஆதார் பதிவை பொறுத்தவரை, 5 வயது வரையிலான புதிய பதிவுகளை பெற்றோரின் ஆதார் விவரங்கள், கைரேகை அங்கீகாரத்துடன் பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம். குழந்தைகள் 5 வயதை அடைந்த பிறகு பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்யவேண்டும்.
15 வயதுக்கு பிறகு நிலையான பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இப்பணிகளையும் அதேபோல, பிறந்தது முதல் பதிவு செய்யாத 7-15 வயது பிள்ளைகளுக்கான பதிவுகளையும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம். பெற்றோர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னுடைய குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுப்பதையும் ஆதார் புதுப்பிக்கும் பணியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆதார் பணியாளர் கோகிலா ஆதார் எடுக்கும் பணியை மாணவ மாணவிகளுக்கு எடுத்து வருகிறார். இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன், இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, பட்டதாரி ஆசிரியர்கள் ஜெயக்குமார் பாரதி சிறப்பாசிரியர் அறிவழகன் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
ஆ.இர. விஜயய்ஷங்கர்/ஆசிரியர்
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.