
பண்ருட்டி. ஜுன்.19. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம்,
மன வளக்கலை மன்றம் & சேமக்கோட்டை ஊராட்சி இணைந்து சேமக்கோட்டை ஸ்ரீ மரகதாம்பாள் உடனுறை ஸ்ரீ திருமூலநாதர் ஆலய வளாகத்தில் 701 மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் மரக்கன்று நடும் விழாவிற்கு பண்ருட்டி ஸ்ரீ ராம் பேட்டரி உரிமையாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன், நுகர்வோர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் (ஒய்வு) எஸ் சுப்பிரமணியன், பண்ருட்டி முன்னாள் நகர துணைத் தலைவர் விஜயரங்கன், பண்ருட்டி மனவள கலை மன்ற தலைவர் டாக்டர் அபிராமி விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருக்கோயில் வளாகத்தில் இப்பணியில் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணி திட்ட ஆசிரியர் மோகன் குமார் மற்றும் மாணவர்கள் இரண்டு ஏக்கர் பரப்பளவில் புதர்களாக இருந்த இடம் முழுமையாக அப்புறப்படுத்தி சமன் செய்து பயன் தரும் 701 மரக்கன்றுகள், 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் 9 ராசிக்கான மரங்கள் மற்றும் நந்தவனம் அமைக்கும் பணி நடைபெற்றது.
பண்ருட்டி வட்டார அலுவலர் சங்கர், சக்தி, சேமக்கோட்டை வார்டு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சத்யா சுரேஷ் ,ஜெயராமன் சக்திவேல், சி. சந்தோஷ் குமார் ,தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச்செயலாளர் ஆர் ரமேஷ் ,ஊராட்சி செயலாளார் கிருஷ்ண மூர்த்தி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பலராமன், கோவில் பூசாரி முருகன் மற்றும் சிவத்தொண்டர்கள்,
பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi