
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 20.06.2024 இன்று டாக்டர் ஆர்.சரவணன் வட்டார மருத்துவ அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் தலைமையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு கிருமி நாசனம் செய்யும் முறை பற்றிய பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் கீழ்பெண்ணாத்தூர் வட்டாரத்தில் பணிபுரியும் OHT ஆபரேட்டர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட நல கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி, கீழ் சுகாதாரர் மேற்பார்வையாளர் சதீஷ்பாபு மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், கீழ்பெண்ணாத்தூர் ஆகியோர் அடங்கிய குழுவினரால் குளோரிநேஷன் பயிற்சி மற்றும் நீரினால் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கல்வியும் விரிவாக அளிக்கப்பட்டது.
சரவணன்
செய்தியாளர் போர்முனை
திருவண்ணாமலை

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?