
பண்ருட்டி. ஜூலை.15 முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதையொட்டி பண்ருட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பண்ருட்டி மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நலப் பள்ளியில் குழந்தைகளுக்கு நாற்காலிகள், பழங்கள், பிஸ்கட்டுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் சுதாமன் முன்னிலை வகித்தார்.

மண்டல உதவி ஆளுநர் என். டி. ரவி சேகர் அவர்கள் சங்க நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். மேலும் இன்னர்வீல் சங்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கு போர்வைகள் வழங்கினார்கள். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் அருண்ராஜ் நன்றி கூறினார்.

பள்ளி நிர்வாகி முருகானந்தம் , சிறப்பாசிரியர்கள் தேவநாதன், ஜெசிதா, ஸ்ரீ பிரியா, ராஜலட்சுமி மற்றும் ரோட்டரி சங்க முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்


More Stories
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆற்காடு கிளை சார்பில் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
Exploring the World of an AI Girlfriend